அச்சிறுபாக்கத்தில் பொதுவுடமை தனியார் வங்கி அதிகாரிகளுடன் சி.சி.டி.வி. கேமரா பொருத்த ஆலோசனை கூட்டம்.



மதுராந்தகம் 

 

காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுபாக்கம் காவல்துறை சார்பாக அச்சிறுபாக்கம் தனியார் திருமண மண்டபத்தில் பொதுவுடமை வங்கி தனியார் வங்கி கூட்டுறவு வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அச்சிறுபாக்கம் காவல் நிலையம் ஆய்வாளர் டி.எஸ்.சரவணன் தலைமையில் சி.சி.டி.வி கேமராக்கள் போதிய அளவில் பொருத்தவும் வங்கிகள் மற்றும் ஏடிஎம் இருக்கும் வளாகத்தில் போதிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தி அதனை தினந்தோறும் ஆய்வு செய்யவும் அனைத்து கேமராக்களும் செயல்படுகிறதா என்பதை தினந்தோறும் ஆய்வு செய்து பழுது ஏற்பட்டால் உடனே சரி செய்யவும் அச்சிறுபாக்கம் பல்வேறு பகுதிகளில் குற்றச் செயல்கள் நடைபெறுவதால் அதனை தடுக்கும் வகையில் பல முன்னேற்பாடுகளை செய்ய வலியுறுத்தி விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு காவல் துறை சார்பாக தேவைப்படும் உதவிகளை செய்து தரப்படும் எனவும் மேலும் சந்தேகப்படும்படி ஏதேனும் வங்கி வளாகத்தில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் அச்சிறுபாக்கம் காவல் ஆய்வாளர் கைபேசி என்னும் தரப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் வங்கி ஊழியர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை காவல்துறையினர் விளக்கினர். மேலும் குற்றச்செயல்கள் நடைபெறாத வண்ணம் இருக்க வங்கி அதிகாரிகள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.




 

Popular posts
திருவண்ணாமலை மலை சுற்றும் பாதையில் சிவனடியார்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
Image
மதனாஞ்சேரியில் திமுக இளைஞர் அணி சார்பில் 250 குடும்பங்களுக்கு ரூபாய் 1000 மதிப்புள்ள மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கபட்டன
Image
திருப்பத்தூர் மாவட்டம தினசரி காய்கறி மார்க்கெட் இடம் மாற்றப்பட்டு பேருந்து நிலையத்தில் இயக்கப்பட்டு வருகிறது
Image
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக புதியதாக கொரோனோ தொற்று யாருக்கும் இல்லை
Image
மதனாஞ்சேரியில் திமுக இளைஞர் அணி சார்பில் 250 குடும்பங்களுக்கு ரூபாய் 1000 மதிப்புள்ள மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கபட்டன
Image