40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் இணையும் ரஜினி - கமல்

" alt="" aria-hidden="true" />

 

40 ஆண்டுகள் கழித்து, ரஜினியும் கமலும் சினிமாவில் இணைய உள்ளனர். இந்த படத்தை கமல்ஹாசன் தயாரிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்ற தகவல் வெளியானது. நடிகர் ரஜினிகாந்த் தற்போது சிவா இயக்கத்தில் தனது 168-வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. 

 

இந்தப் படம் முடிவடைந்ததும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். ‘தில்லுமுல்லு’ படப்பாணியில் இந்த படத்தில் கமல் கவுரவ கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்தப் படத்துக்கான அறிவிப்பை மார்ச் 5ம் தேதி ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

 

அப்போது ரஜினிகாந்த் கமல்ஹாசன் இணைந்து நடிக்க இருக்கும் படம் உறுதியாகும். மார்ச் மாதமே படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டதாகவும் இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த எதிர்பாராத விபத்தால் படப்பிடிப்பு மார்ச் இறுதியில் தொடங்க இருக்கிறது. இப்படத்தின் மூலமாக, மறைந்த பாலச்சந்தர் குடும்பத்தினருக்கு உதவ, கமலும், ரஜினியும் திட்டமிட்டுள்ளனர்.

 

தற்போது ரஜினி நடித்து வரும், ‘அண்ணாத்த’ படம் இறுதி கட்டத்தில் உள்ளது. முழுநேர அரசியலுக்கு ரஜினி வரும்போது, ரஜினி, கமல் இணையும் படம் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது தமிழக அரசியலில் ரஜினி, கமல் கூட்டணியும் உருவாக வாய்ப்புள்ளது.


Popular posts
திருவண்ணாமலை மலை சுற்றும் பாதையில் சிவனடியார்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
Image
மதனாஞ்சேரியில் திமுக இளைஞர் அணி சார்பில் 250 குடும்பங்களுக்கு ரூபாய் 1000 மதிப்புள்ள மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கபட்டன
Image
திருப்பத்தூர் மாவட்டம தினசரி காய்கறி மார்க்கெட் இடம் மாற்றப்பட்டு பேருந்து நிலையத்தில் இயக்கப்பட்டு வருகிறது
Image
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக புதியதாக கொரோனோ தொற்று யாருக்கும் இல்லை
Image
மதனாஞ்சேரியில் திமுக இளைஞர் அணி சார்பில் 250 குடும்பங்களுக்கு ரூபாய் 1000 மதிப்புள்ள மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கபட்டன
Image