திருப்பத்தூர் மாவட்டம தினசரி காய்கறி மார்க்கெட் இடம் மாற்றப்பட்டு பேருந்து நிலையத்தில் இயக்கப்பட்டு வருகிறது
" alt="" aria-hidden="true" />
திருப்பத்தூர் மாவட்ட தினசரி காய்கறி மார்க்கெட் இன்று முதல் புதிய பஸ் நிலையத்தில் இயக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் பேரில் இயக்கப்படுகிறது.திருப்பத்தூர் பொதுமக்கள் கூறுகையில் தினசரி அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வெளியில் வருவதாகவும்.குறிப்பிட்ட காய்கறிகள் அதிக அளவில் வாங்கி வைத்த நிலையிலும் தீர்ந்து விட்ட காரணத்தால் பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே வெளியில் வருவதாக குறிப்பிடுகின்றனர் சந்தை அமைந்துள்ள இடத்தை தவிர மற்ற இடங்களில் அதிக அளவில் பொதுமக்கள் நடமாட்டம் ஏதுமின்றி காணப்படுகிறது .144தடை உத்தரவை மாவட்ட பொதுமக்கள் அதிகளவில் கடைபிடித்து வருகின்றனர் இருப்பினும் குறிப்பிட்ட சிலர் முக கவசம் ஏதுமின்றி காரணம் பீதி ஏதுமின்றி காணப்படுகின்றனர்.அவர்களுக்கு தொடர்ந்து காவல்துறையினர் அறிவித்து வருகின்றனர் தமிழக அரசு குறிப்பிட்டிருக்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பொதுமக்களை அப்பகுதியில் அனுமதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது