மதனாஞ்சேரியில் திமுக இளைஞர் அணி சார்பில் 250 குடும்பங்களுக்கு ரூபாய் 1000 மதிப்புள்ள மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கபட்டன

மதனாஞ்சேரியில் திமுக இளைஞர் அணி சார்பில் 250 குடும்பங்களுக்கு ரூபாய் 1000 மதிப்புள்ள மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கபட்டன


" alt="" aria-hidden="true" />



வாணியம்பாடி முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 100% முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில் ஏழை எளிய மக்கள் மளிகை பொருட்களை வாங்க முடியாமல் தவித்து வரும் நிலையில்
ஆலாங்காயம் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி  பகுதியில் திமுக இளைஞரணி சார்பில் திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வி.எஸ். ஞானவேலன் தலைமையில் அப்பகுதியில் உள்ள ஏழை எளிய 250 குடும்பத்திற்கு ரூபாய் 1000 மதிப்புள்ள அரிசி, பருப்பு, எண்ணைய் உள்ளிட்ட மளிகை பொருட்கள் தொகுப்பை வழங்கினார் இந்த தொகுப்பினை ஆலாங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன்  உதவியுடன் பொருட்கள் வழங்கப்பட்டன, இந்தப் பொருட்கள் வழங்கும் பொழுது சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் மக்கள் நிற்க வட்டமிட்டு அதில் வைக்கப்பட்ட மக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன இதில் திமுக நிர்வாகிகள் வி.எம்.பெருமாள் , எம்.சி.தசரதன், நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.